Sunday, 17 August 2014

சூட்சுமம்




 
சூட்சுமம்

உன்னை நினைத்தேனடி!!
என் கண்கள் குளமாகின்றது...
ஆனந்தக்கண்ணீராலோ ?

என்ன செய்தாய் என்னை ?
என் உயிர் சிலிர்க்கின்றது !!

உன் முகத்தில் வடியும் எண்ணையாக இருப்பேன். ...
அந்த சூரியன் கூட உன்னை சீண்டாமலிருக்க!!
 
நீ வாரீப் பின்னும் கூந்தலின் பின்னலாக இருப்பேன்..
என்றும் உன்னுடன் பிண்ணிப் பிணைந்திருக்க!! 

உயரம் என்னடி உயரம் என் கனுக்காலை வெட்டியாவது...
உன்னுடன் சரிசமமாக நடப்பேன்...

இத்தனை நாள் உன்னை மறந்திருந்தேனோ ? 
அன்பே இன்று மட்டும் -
உன்னை நினைந்து எழுதுகின்றேன் கவிதை !!!

கவிதையே  என்றாவது என்னை நினைத்திருப்பாயா?
அய்யகோ !! இதுதான் " ஒருதலைக் காதலின் சூட்சுமமோ "  !!!

Saturday, 16 August 2014

அன்பளிப்பு


என் காதலியின் முதல்  அன்பளிப்பு !

ஆஹா அதுவே எனக்கு முதல் வியப்பு !

வாங்கித்தந்தாள் என் விரலுக்கு ஓர் வளையம் !

அதில் நுழைய மாட்டேன் என்கிறது என் இதயம் !

இப்படிக்கு உன்னை தீண்டாத ,உன் அன்பை பெறாத -

இந்த அற்பனின் கண்ணீர்த்துளிகள் !!!!!!!.......






நண்பனுக்காக எழுதிய  காதல் கவிதை (மாதிரி) ..

அவள் அவனுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தாள் ,பாவம் அது அவனுடைய விரலில் நுழையவே   இல்லை ..... வேறு  வாங்கி கொடுத்திருக்கலாம் ,ஆனால்  தான் வாங்கிய முதல் அன்பளிப்பே  சரியாக அமையவில்லை என வருந்தியதால்   அவளை  சமாதானப்படுத்த நான் எழுதி கொடுத்த வரிகள் ...(மன்னிக்கவும்),, பிறகு அந்த மோதிரத்தை  சங்கிலியுடன் இணைத்து  கழுத்தில் அணிந்து கொண்டாண்..