Sunday, 17 August 2014

சூட்சுமம்




 
சூட்சுமம்

உன்னை நினைத்தேனடி!!
என் கண்கள் குளமாகின்றது...
ஆனந்தக்கண்ணீராலோ ?

என்ன செய்தாய் என்னை ?
என் உயிர் சிலிர்க்கின்றது !!

உன் முகத்தில் வடியும் எண்ணையாக இருப்பேன். ...
அந்த சூரியன் கூட உன்னை சீண்டாமலிருக்க!!
 
நீ வாரீப் பின்னும் கூந்தலின் பின்னலாக இருப்பேன்..
என்றும் உன்னுடன் பிண்ணிப் பிணைந்திருக்க!! 

உயரம் என்னடி உயரம் என் கனுக்காலை வெட்டியாவது...
உன்னுடன் சரிசமமாக நடப்பேன்...

இத்தனை நாள் உன்னை மறந்திருந்தேனோ ? 
அன்பே இன்று மட்டும் -
உன்னை நினைந்து எழுதுகின்றேன் கவிதை !!!

கவிதையே  என்றாவது என்னை நினைத்திருப்பாயா?
அய்யகோ !! இதுதான் " ஒருதலைக் காதலின் சூட்சுமமோ "  !!!

2 comments:

  1. சூப்பர் , காதலில் வெற்றியா?

    ReplyDelete
    Replies
    1. கனவிலே காதல் . வெற்றி பெற்றால் என்ன தோற்றால் என்ன..

      Delete